:: look into your heart ::

:: hear it speak ::

:: listen ::


Monday, September 26, 2011

confession

wrote this some time earlier this month.
such a confession.

க‌த‌வை 'ட‌பார்!' என்று அடைத்துவிட்டு என் மேனி மெத்தைமேல் மெதுவாக‌ சாய்ந்தது. சோர்வு. சோர்வு என் உள்ள‌ங்காலிலிருந்து என் உச்சி மண்டை வ‌ரையில் த‌லை விரித்தாடிக்கொண்டிருந்தது.
க‌ண்ணுறக்க‌த்தை நாடிக்கொண்டிருந்த‌ என் கண்ணிமைக‌ள், என் தொலைபேசி மௌன‌த்தில் சினுங்கிய‌தும், ச‌ட்டென்று விரிந்தது. என் கை தொலைபேசியை எடுக்க‌, க‌ண்க‌ள் அதை பார்க்க‌, அவ‌ன் முக‌ம் என் தொலைபேசியில், இல்லை இல்லை, மன‌தில் தோன்றிய‌து.

உட‌ல் எவ்வ‌ள‌வு சோர்த்திருந்தாலும், ம‌ன‌ம் சோர்வாக‌ இல்லை போலும். அவ‌ன் குர‌ல் கேட்க‌ என் ம‌ன‌ம் ஒரு குழ‌ப்ப‌ம் நிறைந்த‌ ம‌கிழ்ச்சியிலும் உற்சாக‌த்திலும் துள்ளிக் குதித்த‌து. அந்த‌ ஒரு-த‌லை காத‌ல் உரையாட‌ல் ஒரு முடிவுக்கு வ‌ர‌, மீண்டும் நான் என் உல‌க‌த்திற்கு மீண்டு வ‌ந்தேன். 'இது காத‌ல் இல்லை' என்று என் ம‌ன‌ம் என‌க்கு ஞாப‌க‌ப்ப‌டுத்திய‌து. க‌ன‌வுல‌கில் மித‌ந்தேன். உற‌ங்கினேன்.

ஒரு கிண்ண‌த்தில் சாடின் துண்டுக‌ளைப் போல‌ ஒட்டிக்கொண்டு இர‌யிலில் ப‌ய‌ணிப்ப‌தை ஆங்கில‌த்தில் வ‌ர்ணிப்ப‌ர் இல்லையா? அன்று காலையில் இர‌யில் ப‌ய‌ண‌ம் அப்ப‌டி இல்லை. வெறித்தோடி இருந்த்து சாலை. உல‌க‌த்தில் நான் ம‌ட்டுமே இருந்தால் எப்ப‌டி இருக்கும் என்ற‌ நெடுநாள் க‌ன‌வு அன்று க‌டுக‌ள‌வு ந‌னவான‌து. நான் அம‌ர்ந்த‌ இருக்கையில் அன்று ஏதோ ஒரு த‌னி சுக‌ம். காதிலே இன்னிசையின் தேன் பாய்ச்சல். கைக‌ளில் க‌ண‌க்கு புத்த‌க‌ம். ஜ‌னவ‌ரி திங்க‌ளின் ப‌த்தாம் தேதி. ஊதிய‌ம் வ‌ரும் நாள். வ‌ரும் ப‌ண‌த்தைக் கொண்டு எல்லா செல‌வுக‌ளையும் க‌ழித்துவிட்டு மீத‌முள்ள‌ ப‌ண‌த்தை வைத்து அவ‌ருக்கு ஒரு...
திடீரென்று த‌னிமையின் சுக‌ம் ம‌றைந்து, த‌னிமை என்னை வாட்டிய‌து. அவ‌ருக்கு... அவ‌ர்... இல்லை...
இற‌ந்த‌கால‌த்திலேயே என் ம‌ன‌ம் சிக்கிக்கொண்டிருக்கிறது. க‌ண்க‌ளில் கண்ணீர் ம‌ல்க‌, என் ம‌ன‌தை இறுக்கிக்கொண்டு க‌ண்க‌ளில் நிர‌ம்பிய‌ உப்புநீரை திரும்ப‌வும் க‌ண்க‌ளுக்குள்ளேயே விர‌ட்டினேன்.இரயில் க‌த‌வுக‌ள் திற‌ந்த‌ன‌. என் கால்க‌ள் விறுவிறுவென‌ பாதையில் தாள‌ம் போட்ட‌ன‌. காலையில் வேலையை நோக்கி செல்வ‌தைப்ப‌ற்றி அன்று துய‌ர் இல்லை. இறந்த‌கால‌த்தைவிட்டு எதிர்கால‌த்தை அடைவேனோ என்ற‌ கேள்வி எழ‌ வேத‌னை ம‌ன‌தில் நில‌விய‌து.

காலையிலேயே ஒரு பாட‌லைக் கேட்டால் அதே பாட‌ல் நாள் முழுக்க‌ ம‌ன‌திலே ஓய்வில்லாம‌ல் ஓடிக்கொண்டே இருக்கும். அன்று அவ‌ருடைய‌ முக‌ம் என் நெஞ்சில் நின்ற‌ ராக‌ம். என் அவ‌ர். ப‌ழைய‌ அவ‌ர். அவ‌ரைப்ப‌ற்றி நினைத்தால் என் ம‌ன‌தில் சொட்டும் சில‌ நியாப‌க‌ துளிக‌ள்.
தேநீரில் கொஞ்ச‌மாக‌ பால். காதில் ஆங்கில‌ப் பாட‌ல். முக‌த்தில் க‌டுக‌டுவென கோப‌ம். ப‌ர‌ந்த‌ உத‌டுக‌ளில் க‌ல‌க‌ல‌வென‌ சிரிப்பு . அவ‌ரைச் சுற்றியிருப்பவ‌ர்க‌ளின் முக‌ங்க‌ளில் புன்ன‌கை - என் முக‌த்தில் த‌விர‌. என் காத‌லின் உண்மை நிலை... கண்ண‌த்தில் 'ப‌லார்' என‌ ஒரு அரை விழுந்தாற்போல...

மௌன‌த்தில் சினுங்கிய‌து தொல்லைபேசி. புதிய‌ அவ‌ன், ம‌றுமுனையில், ஆன‌ந்தமாக‌.

அவ‌ன்:ஏய் குட்டி, காலையிலிருந்து என் நியாப‌க‌மே இல்லையா? உன்ன‌ ரொம்ப‌ மிஸ் ப‌ன்னுறேன்.

இவ‌ள்: இல்லை, வ‌ந்த‌திலிருந்து ஒரே வேலையா இருந்தேன், அதான்...

அவ‌ன்: ஹ‌ஹ‌ஹ. சும்மாதான் கேட்டேன் குட்டி. இன்னிக்கு அம்மா உன்ன‌ப்ப‌த்தி கேட்டாங்க‌. உன்ன‌ பார்க்க‌னும்னு சொன்னாங்க‌.

இவ‌ள்: நாம‌ வெறும் ஃபெர‌ன்ஸ்னு அம்மாகிட்ட‌ சொல்லிட்டீங‌க‌ன்னு நென‌ச்ச‌?

அவ‌ன்: சொன்னேன்! அவ‌ங்க‌தான் அப்ப‌டி சொன்னாங்க!

இவ‌ள் மௌன‌ம் சாதிக்க‌.

அவ‌ன்: ச‌ரி குட்டி. உன்ன மூட் out ப‌ன்ன‌ விரும்ப‌ல‌. ஒன்னும் நினைக்காதே! நீ உன் ப‌ழைய‌ வாழ்க்கைய‌ ம‌ற‌க்கிற‌ வ‌ரைக்கும் நாம ஃபெர‌ன்ஸ் தான். ச‌ரி. அப்புற‌ம் கால் பண்ணுறேன். பாய் குட்டி!"

பெருமூச்சு விட‌க்கூடா நெஞ்சில் தெம்பில்லாத‌வாறு, என் மன‌தை என் வேலைப்ப‌ளுவில் புதைத்தேன். த‌ப்பிக்க‌ என‌க்கு தெரிந்த‌ ஒரே வ‌ழி. இந்த‌ நிம்ம‌தி மாலை ஐந்து ம‌ணி வ‌ரையில் ம‌ட்டுமே.
ப‌ழைய‌ அவ‌ரை ச‌ந்தித்தேன். பொழுது சாயும் வேலையில்.
காலை அரும்பி ப‌க‌லெல்லாம் போதாகி, மாலை ம‌ல‌ரும் இவ‌ர் நோய்.

அடுத்த‌ இரண்டு ம‌ணி நேர‌ம் ப‌ழைய‌ வாழ்க்கையை மீண்டும் அனுப‌விக்க‌ காத்திருந்தன‌ என் ம‌ன‌ம், என் உள்ள‌ம், என் உட‌ல், என் ஆசைக‌ள்.
க‌ண்ண‌த்தில் அவ‌ர் முத்த‌மிட‌, ப‌ழைய‌ சுக‌த்தில் மூழ்கினேன் மெல்ல‌. உல‌க‌த்தை உலுக்கிய‌ செய்திக‌ளைப்ப‌ற்றி ஆர்வ‌மாக‌ பேசினோம் நாம் இருவ‌ரும். உள்ள‌ங்க‌ளை இறுக்கிக்கொண்டிருந்த‌ விக்ஷ‌ய‌ங்களைப்ப‌ற்றி க‌தைக்க‌ இரு ம‌ன‌மும் இண‌ங்க‌வில்லை. அந்த‌ நொடியில் புன்ன‌கையிட்டுக்கொண்டே எதேர்சையாக‌ "போங்க‌!" என்று நான் சொல்ல‌, திடீரென‌ அவ‌ர், "அதான் போய்ட்டேனே" என்று ச‌ட்டென்று சொல்லிவிட்டார்.
அவ‌ர்: யாராவ‌து இருக்காங்க‌லா?

(பாசாங்கு)
அவ‌ருடைய‌ அவ‌ள்: யாராவ‌து என்றால்?
அவ‌ர்: ஆர் யூ டேட்டிங் அனிவான்?

(பொய்)அவ‌ருடைய‌ அவ‌ள்: சே, இல்ல‌. நீங்க‌?
அவ‌ர்: நானும் இல்லை.இனிமேலும் இருக்காதுன்னு நினைக்கிறேன்

(துள்ள‌ல்)அவ‌ருடைய‌ அவ‌ள்: வேறு வ‌ழியில்லைன்னா அப்புற‌ம் நீங்க‌ என்ன‌த்தான் க‌ல்யாண‌ம் ப‌ன்ன‌னும்.

அவ‌ர்: ஹ‌ஹ‌ஹ‌ நீயும் தான். க‌ல்யாண‌ம் ப‌ண்ண‌ தேவையில்லையே. நீயும் நானும், ஒரே வீடு... ந‌ம‌க்காக‌...


த‌லைக்குனிந்த‌ என் முக‌ம் அன்னார்ந்து அவ‌ர் முக‌ம் பார்த்த்து. இது போன்ற‌ பல‌ திரும‌ண‌ க‌ன‌வுக‌ள் அந்த‌ ப‌ழைய‌ வாழ்க்கையில் நொடிக்கு நொடி எங்க‌ள் உரையாட‌லில் த‌லைத்தூக்கின‌. அப்போது கேட்கும்போது ச‌ஞ்சார‌ம். இப்பொழுது கேட்கும்போதெல்லாம் ம‌ன‌தில் ச‌ஞ்ச‌லம்.

க‌ட்டிய‌ணைத்து, 'பார்த்துக்கொள்!' என்று அவ‌ர் சொல்லிவிட்டதும் இருவ‌ரும் விடைப்பெற்றோம்.

வீட்டை நோக்கிய‌ ப‌ய‌ண‌ம் ஒரு வெள்ளைத்தாள்.

இல்ல‌த்தை அடைந்துவிட்ட‌தும், கை கால்க‌ளை அழம்பிவிட்டு, என் த‌னியறையில் த‌ஞ்ச‌ம‌டைய‌ விரைந்தேன்.


சுப‌மில்லை.

Wednesday, August 31, 2011

new lease of life?

my last post on april 19... reading it sent a smile to my face.
so many things have changed.

no longer in Oli right now. took a 10 week break and im now back to where i was working previously.
PRBO!!!
looks like i gotta maually jot down details of my life. i keep forgetting. keep forgetting who i am.

so i blogged abt bhaktan teacher in my last post. oh well, u are leaving next week. yes teacher, u were truly such an inspiration to my life and look at where things are now; so misplaced. i'm gonna miss u so much and its gonna hit me hard today... my first lesson without u today at 7pm. fuck.

ok, so next thing in mind. my dad had his first heart attack on monday morning. i was slping and he woke me up at 7am, i called for the ambulance and they never came. so he has two blockages. some people take this chance to act like perfect sissies and behave like women when they claim to have two balls in between their legs. ccb.

i scalded my hand on 18 aug. while making kesari. what an experience! what a pain! really, i rmb telling someone that i will nvr curse someone to burn in hell ever. but, oh wait. looks like you are going to. so the pain is pretty bad and of cos the scars are worse. they are here to stay, as a beautiful reminder too. and haresh, yes, the pretty hand i always showed u with pride beaming in my face is no longer going to be there anymore. bleagh. ok, no more emo.

after ramar's 14 yr vanavasam, he returns back home and so does shree. but mine is 14.5 years! hahaha. awesome. the prayer that finally came true. i guess praying is 25%, God's intervention is another 25% and of course our own actions are 50%. the last bit is just IMPT la. really.

and you. things have changed so much. while i silently and very secretively wish that this and that never happened, i am also glad it did. i know now what i need and what i want, i think. i am still the same old emotional gal who needs a security here and there and of cos, all that comfort. that comfort of knowing that i am not judged cos i really do not like to judge people or put an identity to someone's face cos of their actions. but wait, maybe i should just do that since that would keep me wary of aliens and monsters like you. and you. but you are one lucky ass. என் கண்ணீருக்கு கார‌ண‌ம் நீதான் என‌ தெரிந்தும், உன்னை என் காத‌லுக்கு கார‌ண‌மாக்கினேனே!

and you. why? you, the image of my past and present... i really wonder where you will be in future. u are such a question mark right now and that makes me the confused kid again. i feel sad sometimes, cos something so scarily tells me that this is shortlived... and im fucking shit scared sometimes that u are here to stay. and that would be... unimaginable yet so so so fucking possible. and no, thats not a smile on my face. its closer to a frown, really. cos i know you shree.

shree, fuck it. really. fuck the world. fuck the damn people around u. look at urself. dun look into the mirror and see the people in ur heart. i rmbr very clearly what amma said ystdy. 'பாத்திர‌த்தை அள‌ந்து சோறு போடு'.
how damn true. there is no point at all really. dun care. u are not going to get good words from ppl who think and act like satans. so leave and move away. விட்டு வில‌கி நிற்க‌வேண்டும்...

a significant song: உன்னோடு இருக்கும் பொன்னான‌ நிமிட‌ம்... எந்நாளும் தொட‌ர்ந்திட‌ நெஞ்ச‌ம் ஏங்கும்! :)

so much more in my heart... but the spillage ends here.

adioz.




Tuesday, April 19, 2011

alone.

looks like im officially single. i cried but these were tears of my love and not his. i shall not bore myself any further of wat i will miss and what i have lost.
looking back the past 5 months, i have grown emotionless, grown to take life as it gives me and let people go. i feel less love in my heart and feel less for doing anything for sumone else.

today as i spoke to myself, i realised my weakness. i keep thinking that everyone who walks into my life is special. how stupid of me. all that wastage of energy. and emotions.

i rmbr thiv said that i should stop taking onions and garlic and i have been a faithful follower. and this is the result. less emotions. stark realisation. that hits me in my face. slaps my fat cheeks so hard that i bleed.

look back jayshree. look at the ppl i have been in contact with all of a sudden. who are they? what are they doing to me? where will they be in a year's time?
look at my family. that part of me is over, u know. I know!
look at my job. totally satisfying yet a gazillion issues to deal with everyday.
look at my account balance. pfft.

today at dance class. my teacher's words taught me smth. that no matter how much i had achieved, i stand small before him. i stand shy. and unconvinced of my own power. he pushes and pushes me, silently telling me he believes in me. such an inspiration u are, teacher.
thank u.

i wanna take a deep breathe . clean and good. start my life anew in every way possible. god, i haven been quite faithful i know, but pls help, if u dun mind.

jayshree, let me love you.

shree